செய்திகள் தமிழ் தொடர்புகள்
ரேஸ் காரில் தமிழக அரசின் லோகோ ஏன்?: அஜித் குமார் விளக்கம்
பார்சிலோனா:
தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை இலச்சினையை தனது ரேஸ் காரில் பயன்படுத்துவது ஏன் என்பது குறித்து நடிகர் அஜித் குமார் பதிலளித்துள்ளார்.
சர்வதேச போட்டியின்போது நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இலச்சினையை ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் அஜித்குமார் பயன்படுத்தியதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்வதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இதற்கு நடிகர் அஜித் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
தங்கள் அன்பும், ஆதரவும் எப்போதும் தங்களுக்குத் துணை நின்று வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உயரிய இலக்குகளை நோக்கி அஜித்குமார் ரேஸிங் அணி முழு முயற்சியுடன் பயணிக்கும் என்றும் உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “சென்னையில் கடந்த ஆண்டு ‘ஸ்ட்ரீட் ரேஸ்’ கார் பந்தயத்தை தமிழ்நாடு அரசு நடத்தியது. என்னைப் போன்ற மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களுக்கு பெரிய உந்துதலாக இருந்தது. அதுமட்டுமின்றி வேறு பல விளையாட்டுகளுகும் தமிழ்நாடு அரசு உதவி வருகிறது.
அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இலச்சினையை நாங்கள் உடையில் அணிகிறோம்” என்று அஜித் குமார் கூறியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 26, 2026, 4:12 pm
தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டரை ரத்து செய்தது தமிழ்நாடு அரசு
June 25, 2026, 2:17 pm
அரசுப் பேருந்தில் பெரம்பூருக்கு பயணித்த முதல்வர் விஜய்
June 24, 2026, 11:18 am
வேளாண் அமைச்சரின் சொந்தத் தொகுதியில் ஆயிரக்கணக்கான நெல் முட்டைகள் மழையில் நனைந்து நாசம்
June 23, 2026, 10:20 pm
நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஜூன் 28-இல் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
June 23, 2026, 1:23 pm
1990 முதல் மக்கள் பணி செய்து வருகிறேன்: சட்டசபையில் விஜய் பேச்சு
June 22, 2026, 11:09 am
முதல் அமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
June 18, 2026, 4:15 pm
தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்
June 18, 2026, 10:39 am
