செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையை நோக்கி வரும் டிட்வா புயல்
சென்னை:
தென் மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல், இலங்கை, தென் தமிழகக் கடலோர மாவட்டங்களுக்கு அருகே நிலவி கன மழையைக் கொடுத்து வருகிறது.
இதனால், இலங்கையில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. கனமழை, மற்றும் வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 70 பேர் பலியாகியுள்ளனர். பலரைக் காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிட்வா புயலின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அவர் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிழகக் கடற்கரையை, டிட்வா புயலானது ஒட்டியே நகர்ந்து வரும். நாளை வரை அது தமிழகக் கடற்கரைக்கு இணையாக பயணித்து, ஞாயிற்றுக்கிழமை மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னையை நெருங்குகிறது.
டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் நாகை மாவட்டங்களில் குறிப்பாக கடலுக்கு நெருக்கமாக உள்ள பகுதிகளில் 175 முதல் 250 மி.மீ. வரை மழைப் பதிவாகியிருக்கிறது.
அடுத்த 24 மணி நேரத்துக்கான மழை நிலவரம் - புயலானது கடல் பரப்பில் இருக்கும்வரை டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை இருக்கும். இது இன்று மாலை வரை தொடரும். அதன்பிறகு, கனமழையானது கடலூர், புதுச்சேரிக்கு இடம்பெயரும். டெல்டா மாவட்டங்களுக்கு படிப்படியாக மழை குறையும்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களுக்கு இன்று மாலை அல்லது இரவு முதல் மழை தொடங்கும். முதலில் கிழக்குக் கடற்கரை சாலைப் பகுதியில் தொடங்கி மழை மெல்ல நகருக்குள் ஊடுருவும்.
செங்கல்பட்டின் தென் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு மிகச் சிறந்த நாளாக அமையும்.
கனமழையைப் பொறுத்தவரை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களின் உள் பகுதிகள் மற்றும் விழுப்புரம்.
மிக கனமழையைப் பொறுத்தவரை, நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
அதி கனமழை பொழியும் இடங்களாக கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 9, 2025, 11:00 am
சென்னை விமான நிலையத்தில் 71 விமான சேவை ரத்து: 7-ஆவது நாளாக தவித்த பயணிகள்
December 7, 2025, 11:18 pm
நாளை முதல் 6 நாட்களுக்கு தமிழத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
December 6, 2025, 4:15 pm
இண்டிகோ விமானங்கள் ரத்து: சென்னையில் பயணிகள் போராட்டம்
December 2, 2025, 6:03 pm
தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் ஒரே நாளில் 80 வீடுகள் இடிந்து சேதம்
November 30, 2025, 3:57 pm
எஸ்ஐஆர் படிவம் வழங்க கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு
November 30, 2025, 12:36 pm
மழைக்காலம் என்று பாராமல் எஸ்ஐஆர் பணிக்கு தள்ளப்பட்டுள்ள அதிகாரிகள்: கனிமொழி குற்றச்சாட்டு
November 29, 2025, 11:25 pm
