நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா படுதோல்வி

மாட்ரிட்:

லா லீகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் படுதோல்வி அடைந்தனர்.

ரோமன் சான்சஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் செவிலா அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் 1-4 என்ற கோல் கணக்கில் செவிலா அணியிடம் வீழ்ந்தது.

பல முன்னணி ஆட்டக்காரர்களை கொண்டிருந்தும் பார்சிலோனா அணியினர் இவ்வாட்டத்தில் தோல்வி கண்டது அதன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

மற்றொரு ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் கெல்தா விகோ அணியுடன் சமநிலை கண்டனர்.

ரியால் பெதிஸ் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பான்யோல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset