செய்திகள் விளையாட்டு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கராத்தே அணியின் பதக்க வேட்டை தொடர்கிறது
நகோயா:
தேசிய அணி இன்று ஐச்சி-நகோயாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், அதன் முக்கிய அங்கங்களான பல விளையாட்டுப் போட்டிகள் மூலம் தனது பதக்க வேட்டையைத் தொடரும்.
இதுவரை ஒரு தங்கம், இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள கராத்தே மீதுதான் நிச்சயமாகக் கவனம் இருக்கும்.
உலக சாம்பியன் போட்டியில் வெள்ளிப் பதக்க வெற்றியாளரான சி. ஷாமலாராணி, 50 கிலோகிராமுக்குக் குறைவான எடைப் பிரிவில் பெண்களுக்கான குமித்தே போட்டியில் பங்கேற்பார்.
தேசிய அளவிலான விளையாட்டு வீரர்கள், பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படும் ஆடவர் குழு கத்தா போட்டியிலும் பங்கேற்பார்கள்.
வூஷு போட்டியில், கிளமென்ட் டிங் ஆடவர் தாவோஷு-குன்ஷு பிரிவிலும், பாங் புய் யீ மகளிர் ஜியான்ஷு-கியாங்ஷு பிரிவிலும் போட்டியிடுவார்கள்.
இதே போன்று மலேசிய போட்டியாளர்கள் பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிக்காக போராடவுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 10:08 am
அர்ஜெண்டினா அணிக்கு ஸ்கலோனி தொடர்ந்து பயிற்சியளிக்க வேண்டும்: வீரர்கள் விரும்பம்
September 22, 2026, 9:25 am
அர்ஜெண்டினா அணியில் லியோனல் மெஸ்ஸி: சொந்த மண்ணில் கடைசிப் போட்டி
September 22, 2026, 9:25 am
அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக முஹம்மத் சாலாவுக்குத் தடை
September 21, 2026, 9:24 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
September 21, 2026, 9:22 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: வெற்றிக்காக தத்தளிக்கும் மென்செஸ்டர் யுனைடெட்
September 21, 2026, 8:45 am
சிங்கப்பூருக்காக ஆசிய விளையாட்டில் களம் காணும் 19 வயது சீர்காழி இளம் வீரர் முஹம்மது ஜாஹித்
September 20, 2026, 11:05 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
September 20, 2026, 11:04 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அதிர்ச்சி தோல்வி
September 19, 2026, 9:27 am
