நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசியாவிற்கு மூன்றாவது தங்கம் பெற்று கொடுத்தார் ஷாமலராணி

நகோயா:

தேசிய கராத்தே வீராங்கனை சி. ஷாமலராணி, ஹாங்காங்கின் சாங் யீ டிங்கிற்கு எதிராக நடைபெற்ற 50 கிலோ எடைப்பிரிவுக்கான பெண்கள் குமிதே இறுதிப் போட்டியில், பதற்றம் நிறைந்த ஆட்டத்தின்போதும் நிதானத்தைக் கடைப்பிடித்து அதிரடியாக ஆடி வென்றார். 

மூன்று நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான ஆட்டம் 0-0 என சமநிலையில் முடிந்த நிலையில், ஹான்டே முறைப்படி ஷாமலராணி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, தனது முதல் ஆசிய விளையாட்டுப் போட்டித் தங்கப் பதக்கத்தை வென்றார். 

ஷாமலராணிக்கு நம்பிக்கையின் வாழ்த்துகள். 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset