செய்திகள் விளையாட்டு
அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக முஹம்மத் சாலாவுக்குத் தடை
லண்டன்:
கால்பந்து நட்சத்திர வீரர் முஹம்மத் சலாவின் 2.24 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் அதிவேகமாகச் சென்றபோது பிடிபட்டதைத் தொடர்ந்து, அவர் வாகனம் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் கேமராவில் பதிவானபோது, அந்த ஸ்பெக்டர் மின்சார வாகனத்தை ஓட்டிய நபர் குறித்து காவல்துறைக்குத் தெரிவிக்க இந்த எகிப்திய வீரர் தவறிவிட்டார்.
கடந்த சீசனின் முடிவில் லிவர்பூலை விட்டு வெளியேறுவதாக அவர் அதிரடியாக அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, செஷயரில் உள்ள வில்ம்ஸ்லோவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
பிரிமியர் லீக்கின் வரலாற்றில் வெளிநாட்டைச் சேர்ந்து அதிக கோல்களை அடித்தவரான சலா, தனது வீட்டிற்கு அனுப்பப்பட்ட இரண்டு நீதிமன்ற சம்மன்களுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை.
இதனால் ஒற்றைத் தீர்ப்பு நடைமுறையின் கீழ் ஓட்டுநர் தகவல்களை வழங்கத் தவறியதற்காக, கடந்த மாதம் செஷயரில் உள்ள வாரிங்டனில் உள்ள மாஜிஸ்திரேட்டுகளால் அவருக்கு அவர் இல்லாத நிலையில் தண்டனை விதிக்கப்பட்டது.
இருப்பினும், மணிக்கு 30 மைல் வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டு கைவிடப்பட்டது.
தற்போது துருக்கிய கிளப்பான டிராப்சோன்ஸ்போருக்காக விளையாடும் அந்த கோப் ஜாம்பவானுக்கு, ஆறு மாதங்களுக்கு வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டு 3,696 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2026, 9:25 am
அர்ஜெண்டினா அணியில் லியோனல் மெஸ்ஸி: சொந்த மண்ணில் கடைசிப் போட்டி
September 21, 2026, 9:24 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
September 21, 2026, 9:22 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: வெற்றிக்காக தத்தளிக்கும் மென்செஸ்டர் யுனைடெட்
September 21, 2026, 8:45 am
சிங்கப்பூருக்காக ஆசிய விளையாட்டில் களம் காணும் 19 வயது சீர்காழி இளம் வீரர் முஹம்மது ஜாஹித்
September 20, 2026, 11:05 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
September 20, 2026, 11:04 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அதிர்ச்சி தோல்வி
September 19, 2026, 9:27 am
எனக்கு முடிவே கிடையாது: ரொனால்டோ ரசிகர்களுக்கு நற்செய்தி
September 19, 2026, 9:21 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி அதிர்ச்சி
September 18, 2026, 9:36 am
