நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அர்ஜெண்டினா அணிக்கு ஸ்கலோனி தொடர்ந்து பயிற்சியளிக்க வேண்டும்: வீரர்கள் விரும்பம்

போனஸ் அயர்ஸ்:

அர்ஜெண்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி தேசிய அணியுடனான தனது எதிர்காலம் குறித்து இன்னும் பரிசீலித்து வரும் நிலையில், 48 வயதான அவர் பயிற்சியாளராகத் தொடர வேண்டும் என அவரது வீரர்கள் தெளிவாக விரும்புகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, அவர் மிக முக்கியமான பயிற்சியாளர்களில் ஒருவர். எனது முதல் போட்டியில் விளையாட அவர் எனக்கு வாய்ப்பளித்தார், 

மேலும் அவர் தொடர வேண்டும் என்று நான் நம்புகிறேன் என்று பயிற்சி முகாமுக்காக போனஸ் அயர்ஸுக்கு வந்தபோது நடுக்கள வீரர் நிக்கோலஸ் பாஸ் கூறினார்.

ஸ்கலோனியின் ஒப்பந்தம் டிசம்பரில் முடிவடைகிறது.

மேலும் ஜூலை மாதம் நடந்த பிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் தோற்ற பிறகு, அவர் தனது பதவியில் இருந்து விலகுவது குறித்து முன்னரே சூசகமாகத் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து அவர் அர்ஜெண்டினா கால்பந்து சங்கத்துடன் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அனுபவம் வாய்ந்த தடுப்பாட்ட வீரர் கிறிஸ்டியன் ரொமேரோவும், ஸ்கலோனி தனது பதவியில் தொடர வேண்டும் என்ற தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

அவர் தொடர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த தேசிய அணியை உருவாக்குவதில் அவர் ஒரு முக்கிய நபர், எனவே நிச்சயமாக அவர் எங்களுடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று ரொமேரோ கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset