செய்திகள் தமிழ் தொடர்புகள்
"விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக திட்டம் போடுகிறது”: சீமான்
தூத்துக்குடி:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு, மாடுகள், மரங்களின் மாநாடுகளை தொடர்ந்து, தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு, தஞ்சையில் தண்ணீரின் மாநாடு, தர்மபுரியில் மலைகளின் மாநாடு நடத்தப்போவதாகத் திட்டமிட்டிருக்கிறார்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு நடத்துவதற்காக இடத்தைப் பார்வையிட்டார். இதற்காக படகு மூலம் நடுக்கடலுக்குச் சென்று ஆய்வும் செய்தார்.
தெருக்களில் பிரசாரங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து கரூர் சம்பவம் குறித்து பேசிய சீமான், "அரசியல் கட்சி பிரசாரங்கள், மாநாடுகள் நடத்துவதை இன்னும் கொஞ்சம் ஒழுங்குபடுத்த வேண்டியிருக்கு. தனியாக இடத்தைப் பிடித்து கூட்டம் நடத்தலாம். மக்கள் இருக்கும் தெருக்களில், சாலைகளில் பிரசாரங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது.
இல்லையென்றால் வெளிநாடுகளில் இருப்பதுபோல எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நேரம் ஒதுக்கி, மீடியா மூலம் பேசி மக்களிடம் பரப்புரை செய்யலாம். இப்போது இருக்கும் நடைமுறையால் நேரம், பணம் விரையமாகிறது, மக்களுக்கும் இடையூறாகவும் இருக்கிறது.
தவெக: "கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? விரைவில் உண்மை வெளிவரும்" - விஜய் விளக்கம்
தவெக: "கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? விரைவில் உண்மை வெளிவரும்" - விஜய் விளக்கம்
விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக திட்டம்
கரூர் சம்பவம் குறித்து ஆய்வு செய்ய வந்த பாஜக எம்.பி குழு விஜய்க்கு ஆதரவாகவே நிலைபாடு எடுக்கிறது. பாஜக விஜய்யை எப்படியாவது தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர திட்டமிடுகிறது.
கூட்ட நெரிசல் அசாம்பாவிதத்தில் விஜய் மீதும் தவறு இருக்கிறது, அரசின் மீதும் தவறு இருக்கிறது. விஜய் தன்மீது எந்தத் தவறும் இல்லை என்று பொறுப்பில்லாமல் பேசுவது தவறு. ஒருவரை ஒருவர் மாறி மாறி பழிபோட்டு அரசியல் செய்வது சரியல்ல" என்று பேசியிருக்கிறார் சீமான்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 7:04 am
தமிழக எல்லையில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்: பெங்களூரு சென்ற பயணிகள் அதிகாலையில் அவதி
November 12, 2025, 8:46 am
வாயில் வடை சுடுவது சுலபம், எஸ்ஐஆர் செயல்படுத்துவது கடினம்: அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் காட்டம்
November 10, 2025, 4:39 pm
SIRக்கு எதிராக சென்னையில் ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப் பெருந்தகை அறிவிப்பு
November 9, 2025, 3:47 pm
சீமானின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது வீட்டில் 3 ஆயிரம் பேருக்கு விருந்து
November 8, 2025, 9:14 pm
3,665 காவலர் பணியிடங்களுக்கு 2.25 லட்சம் இளைஞர்கள் தயாராகி வருகின்றனர்
November 8, 2025, 5:23 pm
