செய்திகள் மலேசியா
கெடாவில் திடீர் வெள்ளம்: 200 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்
அலோர் ஸ்டார்:
கெடாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
கெடா பொது பாதுகாப்புப் படையின் துணை இயக்குநர் மேஜர் முஹம்மது சுஹைமி முகமது ஜைன் இதனை தெரிவித்தார்.
நேற்று மாலை முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து கெடாவில் நீர்மட்டம் உயர்ந்தது.
இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து 50 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் பாதிக்கப்பட்டனர்.
அவர்களை தங்க வைப்பதற்காக பொக்கோக் சேனா மாவட்டத்தில் நேற்று இரவு ஒரு தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டது.
இந்த திடீர் வெள்ளத்தால் கம்போங் சுங்கை துரியன், கம்போங் டெமேடு, கம்போங் புலாவ் நியோர், தாமான் புட் ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 11:44 pm
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
April 30, 2026, 11:42 pm
உழைப்பில்லாமல் உயர்வு இல்லை: டத்தோஸ்ரீ சரவணன்
April 30, 2026, 6:09 pm
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்திகள்; நாளை பிரதமர் அறிவிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்
April 30, 2026, 5:50 pm
குழந்தையைக் கைவிட்ட குற்றத்தில் தனித்து வாழும் 1,500 ரிங்கிட் அபராதம்
April 30, 2026, 5:09 pm
தங்காக் கொலை வழக்கு: மலாக்கா ஹோட்டல்களில் பதுங்கியிருந்த 3 பேர்
April 30, 2026, 4:46 pm
