நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் தொழிற்கல்லூரியில் தீச்சம்பவம்: 25 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்

சிங்கப்பூர்:

சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் திடீரென்று தீப் பற்றிக் கொண்டதால் அங்கிருந்த 25 பேர் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

சம்பவம் குறித்து இன்று பிற்பகல் சுமார் 3.30 மணிக்கு குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் குழாய்களைப் பயன்படுத்தித் தீயை அணைத்தனர்.

பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு சுமார் 25 பேர் கட்டடத்தைவிட்டு வெளியேற்றப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப்படை கூறியது.

எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

முதல் மாடியில் உள்ள ஆய்வுக்கூடத்தில் தீ மூண்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset