நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

மணிலா:

பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கத்தில் மாண்டோர் எண்ணிக்கை 69ஐ எட்டியுள்ளது. சுமார் 140 பேர் காயமுற்றனர்.

நேற்றிரவு (30 செப்டம்பர்) சிபு மாநிலத்தின் போகோ நகரில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

22 கட்டடங்கள் சேதமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

சுமார் 100 ஆண்டுப் பழமையான தேவாலயமும் இடிந்து விழுந்தது.

இடிபாடுகளில் சிக்கியிருப்போரைத் தேடும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

காயமுற்றோருக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் திணறுகின்றன.

இரவு முழுவதும் நூற்றுக்கணக்கான பின்னதிர்வுகள் உணரப்பட்டன.

நிலநடுக்கத்தால் மின்தடை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset