நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம்: 22 பேர் உயிரிழந்தனர்

மணிலா:

பிலிப்பைன்ஸில் கடற்கரையை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலநடுக்கம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியை ஒட்டிய கடற்கரை பகுதியில் நேற்று மாலையில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையமானது, 33,000 மக்கள் வசிக்கும் கலாப்பே நகரத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

6.9 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல்கள் இல்லை என்று பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதே சமயம், லெய்ட், செபு மற்றும் பிலிரான் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடற்கரையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும், கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கடுமையாக அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே இந்த சம்பவத்தில் 22 பேர் மரணமடைந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

மேலும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. சாலைகள் இரண்டாக பிளக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset