நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிஷ்னோய் கும்பலை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது கனடா

ஒட்டாவா: 

பஞ்சாபைச் சேர்ந்த சர்வதேச மிரட்டல் கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலை தீவிரவாத அமைப்பாக கனடா அறிவித்தது.

இதுகுறித்து கனடா வெளியிட்ட செய்திக் குறிப்பில், கனடாவில் வன்முறைக்கும் பயங்கரவாதத்துக்கும் இடமில்லை. அச்சுறுத்தல் மூலம் குறிப்பிட்ட மக்களை மிரட்டுவதை எவ்வகையிலும் அரசு ஊக்குவிக்காது.

கொலை, துப்பாக்கிச்சூடு, ஆயுதங்களால் தாக்குதல் நடத்துவது என தீவிரவாதத்தை தூண்டும் பிஷ்னோய் கும்பல் தீவிரவாத அமைப்பாக பட்டியலிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிஷ்னோய் கும்பலின் சொத்து, வாகனங்கள், பணத்தை கைப்பற்ற கனடாவுக்கு அதிகாரம் உள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset