நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கப்பலை பற்களால் இழுத்த மல்யுத்த வீரர் அஷ்ரஃப்

இஸ்தான்புல்:

எகிப்தில் 700 டன் எடை கொண்ட கப்பலைத் தம் பற்களாலே இழுத்தார் மல்யுத்த வீரர் அஷ்ரஃப் மஹ்ரூஸ் (Ashraf Mahrous).

இவ்வாண்டில் அவர் ரயிலை இழுத்தார். 4 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கனரக வாகனத்தை இழுத்தார்.

கயிற்றை வாயில் கவ்விக்கொண்டு அவர் கப்பலை இழுத்தார். பின், அவர் இரண்டு கப்பல்களைச் சேர்த்து இழுத்தார். அவற்றின் மொத்த எடை சுமார் 1,150 டன்.

2018இல் 618 டன் எடையுள்ள கப்பலை ஒருவர் பற்களால் இழுத்துச் சென்றதே தற்போதுள்ள கின்னஸ் சாதனை. அதை முறியடித்துள்ளார் மஹ்ரூஸ்.

இந்த சாதனைக்காக அவர் கின்னஸ் (Guinness) சாதனை புத்தகத்தில் இடம்பெற இருக்கிறார்.

ஆதாரம்: A P

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset