
செய்திகள் தமிழ் தொடர்புகள்
செந்தில் பாலாஜி மீது சந்தேகம்: தவெக வழக்கறிஞர் குற்றச்சாட்டு
மதுரை:
தவெக வழக்கறிஞர் அறிவழகன் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது போலீஸார் போக்குவரத்தை சீர்செய்யவில்லை. பாதுகாப்புக்கு போதுமான காவலர்களை நியமிக்கவும் இல்லை. கரூர் கூட்டத்தில் போலீஸார் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதியால் 41 பேர் உயிரிழந்தனர். அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தால், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற விஜய் தயாராக உள்ளார்.
ஒரு நபர் விசாரணை ஆணையம் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்கும். புலன் விசாரணை நடத்த முடியாது.
கூட்டத்தில் செந்தில் பாலாஜி குறித்து பேசிய உடன் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது. அதன் பிறகே நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் அளிக்கும் விளக்கம், பொறுப்பை தட்டிக்கழிப்பதாக உள்ளது.
தவெகவினர் போலீஸாரின் நிபந்தனைகளை மீறவில்லை. நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை இரவிலேயே உடற்கூராய்வு செய்தது ஏன்? மருத்துவமனையில் ஏற்கனவே இறந்தவர்களின் உடல்களும், இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 12:39 pm
விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த் அவசர ஆலோசனை
October 14, 2025, 12:44 pm
சிபிஐ விசாரணையை விட விஜயகாந்த்தின் ‘புலன் விசாரணை’ நல்லாருக்கும்: சீமான் நக்கல்
October 11, 2025, 9:34 pm
திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
October 10, 2025, 3:25 pm
விஜய் பிரசாரத்துக்கு 60 டிரோன்கள் கொண்டு வரப்பட்டது ஏன்?: மாவட்ட செயலாளர் மதியழகனிடம் போலீசார் விசாரணை
October 8, 2025, 10:24 pm
காஸா இனப் படுகொலைக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
October 6, 2025, 10:30 pm
ராமதாஸை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
October 6, 2025, 9:20 pm
ரேஸ் காரில் தமிழக அரசின் லோகோ ஏன்?: அஜித் குமார் விளக்கம்
October 5, 2025, 4:48 pm
இருமல் மருந்தால் பறிபோன 10 குழந்தைகளின் உயிர்: மருத்துவர் கைது
October 4, 2025, 9:36 pm