நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நீங்கள் சிங்கப்பூர் PR அடையாள அட்டை வைத்திருப்பவரா? மறுநுழைவு அனுமதியின்றி வெளிநாட்டிலிருக்கும் நிரந்தரவாசிகள் PR தகுதியை இழக்கலாம்: புதிய அறிவிப்பு

சிங்கப்பூர்:

உரிய மறுநுழைவு அனுமதி இல்லாமல் வெளிநாடுகளில் இருக்கும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள், அனுமதிக்கு விண்ணப்பிக்க 180 நாள்கள் இருப்பதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்குள் மறுநுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தவறினால் நிரந்தரவாசத் தகுதியை அவர்கள் இழக்கக்கூடும்.

டிசம்பர் முதல் தேதியிலிருந்து இந்த மாற்றம் நடப்புக்கு வரும் என்று உள்துறை அமைச்சு சொன்னது.

2023ஆம் ஆண்டு திருத்தப்பட்ட குடிநுழைவுச் சட்டத்தைக் கட்டங்கட்டமாகச் செயல்படுத்துவதன்கீழ் புதிய அறிவிப்பு வந்துள்ளது.

நிரந்தரவாசிகள் சிங்கப்பூரிலிருந்து வெளியே செல்லும் போதெல்லாம் முறையான மறு நுழைவு அனுமதி வைத்திருப்பது அவசியம்.

தற்போது முறையான மறு நுழைவு அனுமதியின்றி வெளிநாடுகளில் இருக்கும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள், உடனடியாகத் தங்கள் நிரந்தரவாசத் தகுதியை இழந்துவிட்டதாகக் கருதப்படும்.

அவர்கள் மீண்டும் மறு நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க ஒரு மாத அவகாசம் வழங்கப்படுகிறது.

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவர்கள் தங்கள் நிரந்தரவாசத் தகுதியைத் தக்கவைத்துக்கொள்ளலாம்.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset