நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனா முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை

பீஜிங்:

சீனாவின் முன்னாள் வேளாண்துறை அமைச்சர் டாங் ராஞ்சியனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2007 முதல் 2024ம் ஆண்டு வரையில் அமைச்சராக இருந்த டாங் ராஞ்சியன் தனது பல்வேறு பதவிகளை தவறாகப் பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன.
வணிகம், திட்ட ஒப்பந்தம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் முறைகேட்டில் ஈடுபட்டு 268 மில்லியன் யுவான் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த வடகிழக்கு சினாவின் ஜிலின் மாகாண நீதிமன்றம், அவருக்கு மரணதண்டனை விதித்து, அவரது அரசியல் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுவதாக தீர்ப்பளித்தது.

குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர், சட்டவிரோத சொத்துக்களை திருப்பித் தருவது  கூறினார்.

இதையடுத்து, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நன்னடத்தையின் அடிப்படையில் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset