நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலகின் ஆக உயரமான பாலம் திறக்கப்பட்டது: 2 மணி நேர பயணம் இப்போது 2 நிமிடமாக குறைந்தது

குய்சோவ்:

சீனாவின் குய்சோவ் (Guizhou) மாநிலத்தில்  உலகிலேயே ஆக உயரமான Huajiang Grand Canyon பாலம் திறக்கப்பட்டுள்ளது. 

அதன் உயரம் 625 மீட்டர். 

அதனைக் கட்டி முடிக்க சுமார் 3 ஆண்டுகள் எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 

பாலம் போக்குவரத்து நேரத்தை 2 மணியிலிருந்து 2 நிமிடத்திற்குக் குறைக்கும் என அம்மாநிலத்தின் போக்குவரத்துத் துறையின் தலைவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். 

அதனால் பொருளியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வளர்ச்சிகளைக் காணலாம்.

இதற்கு முன்னர் அதே மாநிலத்தில் Beipanjiang ஆக உயரமுள்ள பாலமாக இருந்தது. 

அதன் உயரம் 565 மீட்டர். ஆனால் Huajiang Grand Canyon பாலம் அதன் சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset