நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

IPL 2022 : கே.எல்.ராகுல், ரஷீத் கானுக்கு ஓராண்டு தடை விதிக்கப்படலாம்

சென்னை:

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து கொண்டே வேறொரு அணி நிர்வாகத்துடன் ஒப்பந்தத்துக்காக பேச்சு நடத்தியதற்காக கே.எல்.ராகுல் மற்றும் ரஷீத் கான் ஓராண்டுக்குத் தடை செய்யப்படலாம் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளன.

நவம்பர் 30ம் தேதி வரை வீரர்கள் தங்கள் அணியின் ஒப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டவர்களே. இப்படியிருக்கையில் அதற்கு முன்னதாகவே வேறொரு அணியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதை எப்படி ஏற்க முடியும் என்று இரு அணி நிர்வாகமும் அதிர்ச்சியுடன் கேள்வி  எழுப்பியுள்ளன.

பஞ்சாப் அணி இரண்டு உள்நாட்டு வீரர்களை மட்டுமே தக்க வைத்துள்ளது. ரூ.12 கோடி செலவில் மாயங் அகர்வால், ரூ.4 கோடி செலவில் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை தக்கவைத்துள்ளது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.14 கோடி செலவில் கேன் வில்லியம்சன், ரூ.4 கோடி செலவில் அப்துல் சமத், ரூ.4 கோடி செலவில் உம்ரன் மாலிக் ஆகியோரை தக்க வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset