நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் எவர்ட்டன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் எவர்ட்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணியின் வெற்றி கோல்களை விக்டர் கியோகெரெஸ், மேக்ஸ் டவ்மேன் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்ஹாம் யுனைடெட் அணியுடன் சமநிலை கண்டனர்.

செல்சி அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியிடம் தோல்வி கண்டனர்.

பிரிக்டோன் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் சண்டர்லேண்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset