நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி புரோ லீக்: அல் நசர் அணி முதலிடம்

ரியாத்:

சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியின் புள்ளிப் பட்டியலில் அல் நசர் அணியினர் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

இளவரசர் முஹம்மத் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் கலீஜ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் அல் கலீஜ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணியின் வெற்றி கோல்களை அப்துல்லா அல்-ஹம்தான், அய்மான் யாஹ்யா, ஜோனோ பெலிக்ஸ், ஏஞ்சலோ கேப்ரியல் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து அல் நசர் அணியினர் 67 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

காயம் காரணமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ இவ்வாட்டத்தில் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset