செய்திகள் உலகம்
அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி: 9 பேர் காயம்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
அமெரிக்காவின் டெட்ராய்டிலிருந்து 50 மைல் வடக்கே மிச்சிகனில் கிராண்ட் பிளாங்கில் தேவாலயம் ஒன்று உள்ளது.
அங்கு பலர் கூடியிருந்தபோது திடீரென அங்கிருந்த ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
அதை தொடர்ந்து தீ விபத்தும் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலிசார் விரைந்தனர்.
இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் உயிரிழந்தான்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் பர்ட்டனைச் சேர்ந்த 40 வயது நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த, அமெரிக்க அதிபர் டிரம்ப்,
இது நாட்டில் கிறிஸ்தவர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என தெரிவித்துள்ளார்.
மேலும் மிச்சிகனில் உள்ள கிராண்ட் பிளாங்கில் உள்ள தேவாலயத்தில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு குறித்து எனக்கு விளக்கப்பட்டது.
எப்பிஐ அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் இறந்துவிட்டார்.
இந்த சம்பவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அவர்களது குடும்பங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
நமது நாட்டில் இந்த வன்முறை உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
