நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பள்ளிவாசலுக்குப் பன்றி மாமிசத்தைப் அனுப்பிய சிங்கப்பூரர் கைது

சிங்கப்பூர்:

பள்ளிவாசலுக்குப் பன்றி மாமிசத்தைப் பொட்டலத்தில் அனுப்பியதாக சிங்கப்பூரர் ஒருவர் சிங்கப்பூர் காவல்துறையிடம் சிக்கி உள்ளார்.

இன உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டதாக 61 வயது சிங்கப்பூர் ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பில் டான் கெங் வீ (Bill Tan Keng Hwee) எனும் அவர் சிராங்கூன் நார்த் அவென்யூ 2இல் (Serangoon North Ave 2) உள்ள Al-Istiqamah பள்ளிவாசலுக்குப் பன்றி இறைச்சிப் பொட்டலத்தை அனுப்பினார்.

அதில் பன்றி மாமிசமும் மோசமான குறிப்பொன்றும் இருந்தது.

டான் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீண்டும் அக்டோபர் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

"வழிபாட்டுத் தலங்களைக் குறிவைப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது" என்று உள்துறை அமைச்சர் சண்முகம் கூறினார்.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset