நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஐ.நா சபையில் நெதன்யாகு உரையாற்ற எழுந்ததும் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்த வெளிநாட்டுத் தலைவர்கள்

நியூயார்க்:

ஐ.நா பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்ற எழுந்ததும் அங்கிருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் அவையை விட்டு வெளியேறினர்.

ஐ.நா பொதுச் சபையின் 80-ஆவது கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (செப்.26) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பங்கேற்று உரையாற்றினார். 

முன்னதாக தனது உரையை நிகழ்த்துவதற்காக நெதன்யாகு மேடைக்கு வந்த சில நொடிகளில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவையில் இருந்த பல்வேறு நாட்டுத் தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் தங்கள் இருக்கைகளை விட்டு உடனடியாக எழுந்து கூட்டாக வெளிநடப்பு செய்தனர். 

இதனால் நெதன்யாகு உரையின் போது பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெதன்யாகுவின் உரை காஸா எல்லையில் ஒலிப்பெருக்கிகள் வாயிலாக நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset