நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் ஐடல் முன்னாள் நடுவர் கென் லிம் மானபங்கம் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பு

சிங்கப்பூர்:

Singapore Idol பாட்டுத்திறன் போட்டியின் முன்னாள் நடுவரான திரு கென் லிம் சீ சியாங் (Ken Lim Chih Chiang) ஒரு பெண்ணிடம் பாலியல் ரீதியான கருத்துக்களைச் சொன்னதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில், அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

அவர் எதிர்நோக்கும் 5 குற்றச்சாட்டுகளில் ஒன்று இது.

2012ஆம் ஆண்டில் திரு லிம் தம்முடைய அலுவலகத்தில் ஒரு பெண்ணிடம் பாலியல் ரீதியாகத் தவறாகப் பேசினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

அந்த 26 வயதுப் பெண் சென்ற ஆண்டு ஜூன் மாதம் காவல்துறையிடம் புகார் கொடுத்திருந்தார்.

செப்டம்பர் மாதம் (2023) லிம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஆனால் அந்தப் பெண் பொய் சொன்னதாகவும் தமது கருத்துக்களைத் தவறாகப் புரிந்துக்கொண்டதாகவும் லிம் வாதாடினார்.

அவர் மேலும் 4 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அவருக்கு ஓராண்டு வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset