நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தட்சிணாமூர்த்தியின் மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது: சிங்கப்பூர் அரசு அறிவிப்பு

சிங்கப்பூர்:

மலேசியரான கே. தட்சிணாமூர்த்திக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இன்று பிற்பகல் மூன்று மணிக்கு நிறைவேற்றப்பட்டது.

தட்சிணாமூர்த்தி த/பெ காத்தையா மூர்த்திக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இன்று செப்டம்பர் 25ஆம் தேதி அன்று நிறைவேற்றப்பட்டது.

அக்குடியரசின் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பணியகம் ஓர் அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, 39 வயதான மலேசியர் கடத்தல் நோக்கத்திற்காக 44.96 கிராமுக்குக் குறையாமல் போதைப் பொருள் வைத்திருந்ததற்காக தண்டிக்கப்பட்டார்.

போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தட்சிணாமூர்த்திக்கு முழு உரிமை வழங்கப்பட்டது.

மேலும் விசாரணை மற்றும் மேல்முறையீட்டின் போது வழக்கறிஞர் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

தட்சிணாமூர்த்தி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் தனது தண்டனை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்

மேலும் மேல்முறையீட்டு நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி  அவரது மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

பின்னர் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும், கருணை தோல்வியடைந்தது.

மரண தண்டனை என்பது போதைப்பொருள் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினருக்கும், பரந்த சமூகத்திற்கும் மிகவும் கடுமையான தீங்கு விளைவிக்கும் அதிக அளவிலான போதைப்பொருள் கடத்தல் போன்ற மிகக் கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே விதிக்கப்படுகிறது.

சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பணியகம் இதனை தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset