நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

BREAKING NEWS: சிங்கப்பூரில் தட்சிணாமூர்த்தியின் தூக்கு தண்டனை இன்று மாலை 3 மணிக்கு நிறைவேற்றப்படும்: வழக்கறிஞர்

கோலாலம்பூர்:

சிங்கப்பூரில் தட்சிணாமூர்த்தியின் தூக்கு தண்டனை இன்று மாலை 3 மணிக்கு நிறைவேற்றப்படும்.

அவரது குடும்ப வழக்கறிஞர் என். சுரேந்திரன் இதனை தெரிவித்தார்.

மலேசிய நாட்டைச் சேர்ந்த கே. தட்சிணாமூர்த்தியின் மரணதண்டனை இன்று காலை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை 3 மணிக்கு  மீண்டும் தண்டனை நிறைவேற்றப்படும் என சிங்கப்பூர் அறிவித்துள்ளது.

இன்று மாலை மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்று மட்டுமே எனக்குத் தெரிவிக்கப்பட்டது  என்று சுரேந்திரன் தெரிவித்தார்.

எங்களுக்கு திடீரென்று தகவல் கிடைத்தது. அது மிகவும் அதிர்ச்சியூட்டுவதாகவும் மிகவும் கொடூரமானதாகவும் இருந்தது.

முன்னதாக மரண தண்டனை இன்று நிறைவேற்றப்படாது என்று தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தினருக்கு சாங்கி சிறையிலிருந்து அழைப்பு வந்ததாக சுரேந்திரன் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset