நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

BREAKING NEWS: தட்சிணாமூர்த்தியின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; காரணங்கள் தெரியவில்லை: வழக்கறிஞர்

கோலாலம்பூர்:

சிங்கப்பூரில் தட்சிணாமூர்த்தியின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணங்கள் தெரியவில்லை.

வழக்கறிஞரும் ஆர்வலருமான என். சுரேந்திரன் இதனை தெரிவித்தார்.

மலேசியரான கே. தட்சிணாமூர்த்தியின் மரணதண்டனை  இன்று காலை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் அவருக்கான தண்டனையை சிங்கப்பூர் சிறை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளதுள்ளனர்.

நேற்று நள்ளிரவுக்குப் பிறகு சிங்கப்பூர் சிறைச்சாலை அதிகாரிகளால் தொலைபேசி அழைப்பு மூலம் தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தினருக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், இந்த முடிவுக்கான காரணங்கள் குறித்து மேலும் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

குறிப்பாக சாங்கி சிறையில் இன்று காலை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்த மலேசிய நாட்டைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி கட்டையாவின் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை.

இந்த நேரத்தில் எங்களிடம் வேறு எந்த தகவலும் இல்லை. 

சிறந்த முடிவுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset