நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷிய போருக்கு இந்தியாவும் சீனாவும் நிதி: டிரம்ப் எச்சரிக்கை

நியூயார்க்: 

ரஷிய போருக்கு இந்தியா, சீனா கச்சா எண்ணெய் வாங்கி நிதியுதவி அளித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.

உக்ரைன் மீதான போரை நிறுத்தவில்லை என்றால் ரஷியா மீது மேலும் கடும் பொருளாதாரத் தடைகள் ஏற்படுத்தப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்தார்.

ஐ.நா. பொதுச் சபையின் 80வது கூட்டத்தில் பேசிய டிரம்ப், ரஷியாவிடம் இருந்து இந்தியாவும், சீனாவும் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு நிதியுதவி அளிக்கின்றன.

நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உள்ள நாடுகள்கூட ரஷியாவிடம் தொடர்ந்து எரிபொருள்களை வாங்குகின்றன.

உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா முன்வராவிட்டால், அந்நாடு மீது கடுமையான பொருளாதார தடைகள் ஏற்படுத்தப்படும்.

இந்தியா - பாகிஸ்தான் போர், கம்போடியா - தாய்லாந்து போர், இஸ்ரேல் - ஈரான் போர் என ஏழு போர்களை நிறுத்தினேன். இந்தப் போர்களை நிறுத்த ஐ.நா. உதவி செய்யவில்லை. ஐ.நா.வின் வெற்று வார்த்தைகள் போர்களை நிறுத்த உதவாது. எனினும், ஐ.நா.வுக்கு அமெரிக்கா 100 சதவீத ஆதரவு அளிக்கிறது.

காஸாவில் உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும். ஹமாஸ் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்பதற்குப் பதிலாக, அவர்களிடம் உள்ள பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

அகதிகளை வெளியேற்றவில்லை என்றால் ஐரோப்பிய நாடுகள் நரகத்துக்கு சென்றுவிடும் என்றார் டிரம்ப்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset