நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாலஸ்தீனத்தை அங்கீகரித்த பிரான்ஸ் அதிபர் அமெரிக்க சாலையில் காக்க வைக்கப்பட்டார்

நியூயார்க்:  

ஐ.நா. பொதுச் சபையில்  பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அமெரிக்க சாலையில் அரை மணி  காக்க வைக்கப்பட்டார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வாகன அணிவகுப்பிற்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் கார் தடுத்து நிறுத்தப்பட்டது.

காரிலிருந்து இறங்கி டிரம்ப்பிற்கு தொலைபேசியில் அழைத்து,
"நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்ன நடந்தது என்று தெரியுமா? உங்களுக்காகத்தான் நான் இங்கு சாலையில் காத்துக் கொண்டிருக்கிறேன், ஏனென்றால் உங்களுக்காக சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன" என்று சிரித்தவாறே கூறியுள்ளார்.

அப்போது, ஒரு காவல்துறை அதிகாரி, "மன்னிக்கவும் அமெரிக்க அதிபருக்காக அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளன" என்றார்.

பின்னர் நடந்தே தனது தூதரகத்துக்கு மேக்ரான் திரும்பினார்.

முன்னதாக, ஐ.நா. பொதுச் சபையில் பேசிய மேக்ரான் பிரான்ஸ் பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதாக அறிவித்தார்.

இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான நீண்டகால மோதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். காஸாவில் நடக்கும் போருக்கு எந்த நியாயமும் இல்லை என்றார்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, போர்ச்சுகலைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் இணைந்துள்ளது.

மேக்ரான் நடந்து செல்லும் காட்சி உலகெங்கும் வைரலாகி வருகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset