நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விமான சக்கரத்தில் 2 மணி நேரம் மறைந்து காபூலிலிருந்து தில்லி வந்த சிறுவன்

புது டெல்லி: 

ஆப்கானிஸ்தானிலிருந்து தில்லி வரை விமானத்தின் சக்கரப் பகுதியில் மறைந்து 2 மணி வரை  13 வயது சிறுவன் பத்திரமாக பயணித்துள்ளார்.

காபூலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட கேஏஎம் விமானம் புது தில்லி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

அந்த விமானத்துக்கு அருகே சிறுவன் ஒருவன் சுற்றித் திரிந்ததைக் கண்ட பாதுகாப்புப் படையினர் அவனைக் கைது செய்து விசாரித்தனர்.

காபூல் விமானநிலையத்துக்குள் நுழைந்து ஆர்வமிகுதியால் விமானத்தின் பின்புற சக்கரம் உள்ள இடத்தில் மறைந்ததாக தெரிவித்தான். அந்த இடத்தில் சிறு ஸ்பீக்கர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு எந்தவித சதிச் செயலும் இல்லை என சோதனையில் உறுதி செய்யப்பட்டது.  அதே விமானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு அந்தச் சிறுவன் திருப்பி அனுப்பப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள்  தெரிவித்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset