நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கனமழையுடன் பலத்த காற்று காரணமாக தலைநகரில் மரங்கள் விழுந்தது: வெள்ளம் ஏறியது

கோலாலம்பூர்:

கனமழையுடன்  பலத்த காற்று காரணமாக தலைநகரின் மரங்கள் விழுந்ததுடன் வெள்ளம் ஏறியது.

இன்று மாலை பல பகுதிகளில் பெய்த கனமழை, பலத்த காற்று காரணமாக தலைநகரின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.

பிற்பகல் 3 மணிக்கு நடந்த இந்த சம்பவம் பல முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தியது.

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் போக்குவரத்து தகவல் மையத்தின்படி, 

கோலாலம்பூர் நகர மையத்தில் பல இடங்களில் மழைநீர் தேங்கி, மரங்கள் விழுந்ததால், கோலாலம்பூர் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மெதுவாகத் தொடங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பங்சார், குறிப்பாக ஜாலான் டெம்பினிஸ், ஜாலான் டான்டோக், அத்துடன் தேசிய பள்ளிவாசல் அருகிலுள்ள பகுதிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset