நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ ரமணன் மீதான சார்லஸ் சந்தியாகோவின் குற்றச்சாட்டு மலிவு விளம்பர தந்திரமாகும்: குமரேசன்

பட்டர்வொர்த்:

கெஅடிலான் உதவித் தலைவர்  டத்தோஸ்ரீ ரமணன் மீதான சார்லஸ் சந்தியாகோவின் குற்றச்சாட்டு மலிவான விளம்பர தந்திரமாகும்.

கெஅடிலான்  உச்சமன்ற உறுப்பினரான ஏ. குமரேசன் இவ்வாறு கூறினார்.

டத்தோஸ்ரீ ரமணன் மீதான சார்லஸ் சந்தியாகோவின் விமர்சனத்தை ஒரு கட்சித் தலைவர் மலிவான விளம்பர தந்திரமாகும் என அவர் முத்திரை குத்தியுள்ளார். 

மேலும் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் விரும்பினால் எதிர்க்கட்சியில் சேரலாம்.

சார்லஸ் சந்தியாகோவின் கருத்துக்கள் களத்தில் உள்ள யதார்த்தத்தை, அதாவது மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு உதவ அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை பிரதிபலிக்கவில்லை.

மேலும் இந்திய சமூகத்தின் நல்வாழ்வைக் கவனிப்பதில் முந்தைய நிர்வாகங்கள் ஒற்றுமை அரசாங்கத்தைப் போல உறுதியுடன் இல்லை.

இந்திய சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தானே கண்காணித்து வருகிறார்.

குறிப்பாக இந்தியர்கள் தலைமையிலான அமைச்சகங்கள் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டன.

டத்தோஸ்ரீ ரமணன் துணை அமைச்சராக இருக்கும் தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சின் கீழ் உள்ள ஏராளமான முயற்சிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.

இதன் மூலம் பல கோடி ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது. இந்திய சமுதாயமும் பயன் பெறுகிறது.

ஆக சந்தியாகோ போன்ற ஜசெக தலைவர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.

அந்தக் கட்சியும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

புத்ராஜெயாயை கைப்பற்ற தேசியக் கூட்டணி, பாஸ் கட்சிக்கு வாய்ப்பு இருப்பதாக சந்தியாகோ உண்மையிலேயே நம்பினால், ஜசெகவை விட்டு வெளியேறி எதிர்க்கட்சியில் சேரலாம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset