நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சேதமடைந்த சிப் கொண்ட அடையாள அட்டைகளை நாளை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம்: சைபுடின்

காஜாங்:

சேதமடைந்த சிப் கொண்ட  அடையாள அட்டைகளை நாளை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம்.

உள்துறை அமைச்சர் சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.

அடையாள அட்டையில் சேதமடைந்த சிப்பை கொண்டுள்ள் நபர்களுக்கு இலவசமாக அடையாள அட்டையை மாற்றும் வசதியை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது நாளை முதல் அக்டோபர் 7 வரை அமலில் இருக்கும்.

நாடு முழுவதும் உள்ள எந்த தேசிய பதிவுத் துறை முகப்பிடங்களில் அடையாள அட்டையை  மாற்றி கொள்ளலாம்.

தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக மக்கள் இந்த மானியத்தைப் பெறுவது பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, 

இந்தக் காலகட்டத்தில் செலவுகளை முழுமையாக ஏற்க  அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனும் பூடி95 மானியத்தின் பலன்களை சுமுகமாக அனுபவிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக இது செய்யப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset