நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சைட் சாடிக்கின் விடுதலையை ரத்து செய்ய மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞர் 28 காரணங்களை முன்வைத்தார்

புத்ராஜெயா:

சைட் சாடிக்கின் விடுதலையை ரத்து செய்ய மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞர் 28 காரணங்களை முன்வைத்துள்ளார்.

நம்பிக்கை மீறல், சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல், அர்மாடா நிதியில் இருந்து நிதி திரட்டிய பணமோசடி ஆகிய குற்றங்கள் தொடர்பாக மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் மீது வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஜூன் 25 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விடுதலை, விடுவிப்பும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை, இரண்டு பிரம்படி தண்டனையிலிருந்து விடுவித்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை பெடரல் நீதிமன்றம் ஏன் ரத்து செய்ய வேண்டும்.

இதற்காக 28 காரணங்களை அரசு வழக்கறிஞர் முன்வைத்துள்ளார்.

இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்த மேல்முறையீட்டாளராக அரசு வழக்கறிஞர் இன்று சைட் சாடிக்கை பிரதிவாதியாகக் குறிப்பிட்டு, இக்காரணங்களை முன்வைத்தார்.

இது தொடர்பாக, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யவும், பிரதிவாதிக்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் முந்தைய தண்டனை மற்றும் தண்டனையை மீண்டும் நிலைநாட்டவும் அரசு வழக்கறிஞர் பெடரல் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset