நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோ பாஸ் கட்சியைச் சந்திக்க முடியும், ஜசெக ஒன்றாக செயல்பட முடியும்; ஆனால் மஇகா அவதூறுகளை எதிர்கொள்வதா?: தினாளன்

கோலாலம்பூர்:

அம்னோ பாஸ் கட்சியைச் சந்திக்க முடியும், ஜசெக ஒன்றாக செயல்பட முடியும். ஆனால் மஇகா அவதூறுகளை எதிர்கொள்வதா?.

மஇகாவின் வியூக அதிகாரி டத்தோ தினாளன் இக்கேள்வியை எழுப்பினார்.

பாஸ் கட்சியுடன் மஇகா இணைவது பற்றி எதிர்மறையான கருத்தை உருவாக்கிய சிலரின் பாசாங்குத்தனமான அணுகுமுறை கண்டிக்கத்தக்கது. 

காரணம் முன்பு அம்னோ அக்கட்சியுடனான சந்திப்பு மிகவும் சாதாரணமாகக் கருதப்பட்டது.

அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஸ்ராஃப் வாஜ்டி, அம்னோ பாஸ் கட்சியுடன் ஒரு சந்திப்பை நடத்தியதாக ஒப்புக் கொண்டார்.

ஆனால் அம்னோ மலாய்க்காரர் நலன்களை விற்றுவிடுகிறது அல்லது அவர்களின் வாக்காளர்களுக்கு தீங்கு விளைவிப்பதாக எந்தக் குற்றச்சாட்டையும் எழுப்பவில்லை.

அதே போன்று மலேசியாவின் அரசியல் வரலாற்றில் ஜசெக பாஸ் கட்சியுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தது.

அந்த உறவு துண்டிக்கப்பட்ட பிறகும் கூட, ஜசெக அமானா நெகாரா கட்சியை வெட்கமின்றி ஏற்றுக்கொண்டது.

ஆனால் மஇகா பாஸ் கட்சியுடன் இருக்க விரும்புகிறது என்ற கருத்து மட்டும் கொடுக்கப்படும்போது,   அது தொடர்ந்து ஒரு பெரிய பிரச்சினையாக மாற்றப்பட்டு தடை. செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது? என்று அவர் கூறினார்.

மஇகா, பாஸ் கட்சிகளுடனான ஒத்துழைப்பு இந்திய சமூகத்தை அச்சுறுத்தும் என்று பரப்பப்படும் பிரச்சாரத்திற்கு எந்த அடிப்படையும் இல்லை.

உண்மையில் மலேசியாவில் உள்ள ஒவ்வொரு கட்சியும் மூலோபாய நலன்களுக்காக மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன அல்லது இணைந்துள்ளன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset