நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாய்க்காரர் அல்லாத மக்களின் அதிருப்தியில் டத்தோஸ்ரீ ரமணன் இலக்கை தவறவிட்டுள்ளர்: சார்லஸ்

கோலாலம்பூர்:

மலாய்க்காரர் அல்லாத மக்களின் அதிருப்தியில் டத்தோஸ்ரீ ரமணன் இலக்கை தவறவிட்டுள்ளர்.

கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ இதனை கூறினார்.

அரசாங்கத்தின் செயல்திறனில் அதிருப்தி அடைந்த மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் யதார்த்தத்தை கெஅடிலான் உதவித்  தலைவருமான அவர்  புறக்கணித்துள்ளார்.

அரசாங்கத்தின் மடானி தொலைநோக்குப் பார்வை தேசியக் கூட்டணியின் மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்கள் மீது தனது கவனத்தை விரிவுபடுத்த கட்டாயப்படுத்துகிறது என்ற டத்தோஸ்ரீ ரமணனின் கருத்து தவறானதாக கருதப்படுகிறது.

இது அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தவறான தீர்வுக்கு வழிவகுக்கும்.

புத்ராஜெயாவைக் கைப்பற்றும் வாய்ப்பை பாஸ், தேசியக் கூட்டணியால் இப்போது உணர முடிகிறது.

இதனால் தான் மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களை தேசியக் கூட்டணி அணுகத் தொடங்கியதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset