நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியாவில் புகழ் பெற்ற லுக் சலூன் பிரிக்பீல்ட்ஸில் கோலாகலமாக திறப்பு விழா கண்டது

கோலாலம்பூர்:

பிரிக்பீல்ட்ஸ் MRCB வளாகத்தின் முதல் மாடியில் லுக் சலூன் திறப்பு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

முதல் முறையாக மலேசியாவில் லுக் சலூன்  கிளையினைத் திறப்பு விழா கண்டது  பெருமகிழ்ச்சி அடைகிறது என்று அதன் நிர்வாக இயக்குனர் மகா கணேஷ் தெரிவித்தார்.

LOOKS சலூன் என்பது இந்தியாவில்  280க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட பிரபலமான Unisex Hair & Beauty பிராண்டாகும்.

தற்போது மலேசியாவின் கோலாலம்பூரில் எங்கள் உலகத் தரச் சேவைகளை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம்.

உலக தரம் வாய்ந்த லூக் சலூனுக்கு வாடிக்கையாளர் நேரடியாக வருகை தந்து தங்களுக்கு ஏற்ற வகையில் முக அலங்காரம், சிகை  அலங்காரம் செய்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

முன்னதாக முன்னாள் மனிதவள அமைச்சர்,  பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவக்குமார், மைக்கியின் டத்தோஸ்ரீ என்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இந்த லுக் சலுனை திறந்து வைத்தனர்.

மேலும் மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார், அம்மன் மெஸ் உணவகத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ குமார், கேவிடி தங்க மாளிகை குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் தங்கத்துரை,
லூக் சலூன் கடை நிர்வாக  இயக்குனர் மகா கணேஷ், மலேசிய சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ராஜசேகரன், மகேஸ்வரி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

சீனர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் Unisex Hair & Beauty துறையில் இந்திய இளைஞர் மகா கணேஷ் கால் பதித்துள்ளதை பெரிதும் வரவேற்பதாக மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

நம்மவர்களும் இதுபோன்ற துறைகளில் துணிந்து இறக்க வேண்டும்.

Unisex Hair & Beauty தொழில் துறைகளுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset