நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாரா விசாரணை நடவடிக்கைகளை அவமதித்ததாக ஷாபி மீது குற்றம் சாட்டுவது குறித்து ஏஜிசி பரிசீலித்து வருகிறது

கோலாலம்பூர்:

ஷாரா விசாரணை நடவடிக்கைகளை அவமதித்ததாக ஷாபி மீது குற்றம் சாட்டுவது குறித்து ஏஜிசி பரிசீலித்து வருகிறது.

ஷாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான விசாரணை குறித்து வாரிசான் தலைவர் ஷாபி அப்துல்லா  கருத்து தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று சட்டத்துறை தலைவர் அலுவலகம் (ஏஜிசி) தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 20 அன்று ஒரு நிகழ்ச்சியில் ஷாபி கூறியதாகக் கூறப்படும் அறிக்கையின் உள்ளடக்கத்தை விரிவாக ஆய்வு செய்து வருவதாக ஏஜிசி தெரிவித்துள்ளது.

இதுபோன்ற ஒரு அறிக்கை பொதுமக்களிடையே தவறான கருத்துக்களை உருவாக்கும்.

மேலும் நடந்து வரும் நீதிமன்ற நடவடிக்கைகளை சீராக நடத்துவதை பாதிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

விசாரணை முடிந்ததும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவது உட்பட, சட்டத்தின் விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க இந்தத் துறை தயங்காது என்று ஏஜிசி தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset