நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியரான தட்சிணாமூர்த்தியின் மரணத் தண்டனை சிங்கப்பூரில் இந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட உள்ளது: வழக்கறிஞர்

கோலாலம்பூர்:

சிங்கப்பூருக்குள் 44.96 கிராம் போதைப் பொருளை கடத்தியதற்காக மலேசிய நாட்டவருக்கு வரும் வியாழக்கிழமை சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

தனது முன்னாள் கட்சிக்காரர் கே. தட்சிணாமூர்த்திக்கு நேற்று மரண தண்டனை அறிவிப்பைப் பெற்றதாக  முன்னாள் வழக்கறிஞர் எம்.ரவி தெரிவித்தார்.

தட்சிணாமூர்த்தியை தான் இதுவரை அறிந்த மிகவும் மென்மையான ஆன்மாக்களில் ஒருவர் என்று வர்ணித்த ரவி, 

தனது மகனின் மரணதண்டனை உறுதிசெய்யப்பட்ட பிறகு, அவரின் தாயாருடன் தனது உணர்ச்சிபூர்வமான உரையாடலைப் பகிர்ந்து கொண்டார்.

கற்பனை செய்ய முடியாத ஒன்றை விவரிக்கும்போது அத்தாயின் குரல் நடுங்கியது.

தன் மகன் உயிருடன் இருக்கும்போது ஒரு இறுதிச் சடங்கைத் திட்டமிடுவது தான் இந்த மரண தண்டனையின் கொடுமை.

குடும்பங்கள் மணிநேரங்களை எண்ணி, இரவு முழுவதும் சாங்கி சிறைச்சாலைக்கு வெளியே காத்திருந்து, தாங்கள் வளர்த்து ஆளாக்கிய பிள்ளையின்  உடலைப் பெறத் தயாராக வேண்டும் என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் வேதனையுடன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset