நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மாமியாரின் உடலை ஆற்றில் வீசியதை ஒப்புக்கொண்ட பெண்

தைவான்:

தைவானில் மாமியாரின் உடலை ஆற்றில் வீசியதை யின் என்ற  பெண் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

தைவானின் நியூ தைபே நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண், கடந்த மாதம் தனது 93 வயது மாமியாரின் உடலை ஆற்றில் வீசியதை ஒப்புக்கொண்டதாக மஸ்ட்ஷேர்நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வாங் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணை ஆகஸ்ட் 8ஆம் தேதி காணாமல் போனதாக அவரது மகள் முன்பு புகார் அளித்திருந்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் வாக்குமூலம் அளித்த எட்டு நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 26 அன்று சதுப்பு நிலப் பகுதியில் அந்தப் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

ஆகஸ்ட் 6 ஆம் தேதி, வீட்டிற்கு வந்தபோது தனது மாமியார் அசையாமல் கிடப்பதைக் கண்டதாக யின் கூறியபோது சம்பவம் தொடங்கியது.

வயதான பெண் இறந்துவிட்டார் என்று நம்பி, பீதியடைந்து, குடும்ப உறுப்பினர்களால் குற்றம் சாட்டப்படுவார் என்ற பயத்தில் இருந்த யின் உடலை ஒரு சூட்கேஸில் மறைத்து வைத்தார்.

பின் அதை ஆற்றில் விசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset