நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கையில் இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபா அவர்களின் நூற்றாண்டு விழாவும் 'தகைசால் தமிழர்' விருது பெற்ற பேராசிரியர் கே.எம் . காதர் மொகிதீன் அவர்களுக்கான பாராட்டு நிகழ்வும்

கொழும்பு: 

தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர்” விருது பெற்ற இந்திய முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம் . காதர் மொகிதீன் அவர்களுக்கான பாராட்டு நிகழ்வும், இசை முரசு மர்ஹூம் நாகூர் ஈ.எம். ஹனிபா அவர்களின் பிறந்த நூற்றாண்டு நினைவேந்தல் நிகழ்வும் மகுட விழாவாக  கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் ஆகியோர் முன்னிலை வகித்த இந் நிகழ்வில்,

இலங்கைப் பாராளுமன்ற பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலி, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் ஆகியோர் முதன்மை அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

தமிழகத்திலிருந்து நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அப்துர் ரஹ்மான், நாகப்பட்டினம் தொகுதி எம். எல். ஏ. ஷா நவாஸ், முன்னாள் எம். எல். ஏ அபூபக்கர், எழும்பூர் தொகுதி கவுன்சிலர் ஃபாத்திமா முஸஃப்பர், பாடகர் இறையன்பன் குத்தூஸ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

ஏ.ஆர். ஏ. ஹஃபீஸ்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset