நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலக போதைப் பொருள் தயாரிப்பு கடத்தல் நாடுகளின் டிரம்ப் பட்டியலில் இந்தியா, சீனா, பாகிஸ்தான்

நியூயார்க்: 

உலக அளவில் போதைப் பொருள்களின் தயாரிப்பு மற்றும் கடத்தல் அதிகமுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட பட்டியலில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 23 நாடுகள் உள்ளன.

இது தொடர்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் அளித்த அறிக்கையில், உலக அளவில் சட்டவிரோத போதைப் பொருள்களின் தயாரிப்பு, கடத்தலில் ஆப்கானிஸ்தான், பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, பர்மா, சீனா, கொலம்பியா, கோஸ்டா ரிகா, டொமினிகன் குடியரசு, ஈகுவடார், எல் சால்வடார், கௌதமாலா, ஹைதி, ஹோண்டுராஸ், இந்தியா, ஜமைக்கா, லாவோஸ், மெக்ஸிகோ, நிகரகுவா, பாகிஸ்தான், பனாமா, பெரு, வெனிசூலா ஆகிய 23 நாடுகள் உள்ளன.

இந்த நாடுகளால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.  போதைப் பொருளுக்கான மூலப்பொருள் விநியோகத்தில் உலகின் மிகப் பெரிய ஆதாரமாக சீனா உள்ளது  என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset