நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

எச்1பி விசா கட்டணத்தை 100,000 அமெரிக்க டாலருக்கு உயர்த்தும் உத்தரவுக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்

வாஷிங்டன்:

எச்1பி விசா கட்டணத்தை 100,000 அமெரிக்க டாலருக்கு உயர்த்தும் உத்தரவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

அமெரிக்காவில் புதிய எச்1பி தொழிலாளர் விசா விண்ணப்பங்களுக்கு 100,000 அமெரிக்க டாலர்கள் (472,000 ரிங்கிட்) கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டணத்தை  உயர்த்தும் உத்தரவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக 2ஆம் முறை பொறுப்பேற்ற பிறகு டிரம்ப், வெளிநாடுகளில் இருந்து வேலை, படிப்புக்காக, அமெரிக்கா வருவோருக்கான விசா,  குடியுரிமை விதிகளை கடுமையாக்கி வருகிறார்.

அதன்படி, அமெரிக்காவுக்கு வேலைக்காக வரும் வெளிநாட்டவருக்கான எச்1பி விசா வழங்கும் நடைமுறையில் அதிரடி மாற்றங்களை அவர் அறிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் தற்போது எச்1பி விசா கட்டணத்தை 100,000 அமெரிக்க டாலராக உயர்த்தியுள்ளார். 

இதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

அப்போது அவர் அருகில் இருந்த வர்த்தக அமைச்சர் ஹாவர்ட் லுட்னிக்,

இனி பன்னாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்களை அமெரிக்காவில் பணியமர்த்த ஒரு லட்சம் டாலர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset