நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா தேசியக் கூட்டணியில் இணைவது தொடர்பான முடிவு; நவம்பரில் இறுதி செய்யப்படும்: டத்தோஸ்ரீ சரவணன்

தாப்பா:

மஇகா தேசியக் கூட்டணியில் இணைவது தொடர்பான முடிவு வரும் நவம்பரில் இறுதி செய்யப்படும்.

மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

மஇகா, தேசியக் கூட்டணியில் இணையும் தனது எதிர்காலம் குறித்த முடிவை இறுதி செய்யும்.

மேலும் இந்த நவம்பரில் நடைபெற உள்ள கட்சியின் மாநாட்டில் இம்முடிவு எடுக்கப்படலாம்.

 பாஸ், பெர்சத்து கட்சிகளின் அழைப்புகள் இருந்தபோதிலும், முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கட்சியின் உயர் தலைமையிடம் இல்லை.

அனைத்து முடிவுகளும் மஇகா பொதுப் பேரவையில் பேராளர்களின் ஆதரவைப் பொறுத்தது.

பாஸ், பெர்சத்துவிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அக்கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இந்த விவகாரத்தில் உண்மையில், எனக்கும் தலைவருக்கும் முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை.

தேசிய பேராளர மாநாட்டால் மட்டுமே முடிவு செய்ய முடியும். 

இந்த நவம்பரில், பேராளர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பார்கள். 

இதுவரை பல மாநிலங்களிலிருந்து எங்களுக்கு தீர்மானங்களை பெற்றிருந்தாலும், ஒட்டுமொத்த முடிவை பொதுச் பேரவையிடம் விட்டுவிடுவோம்.

தாப்பாவில்  கம்போங் ஓராங் அஸ்லியில் 68ஆவது சுதந்திர மாத விழா விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தலைமையேற்ற தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ சரவணன் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset