நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோவிட்-19 இன் புதிய தொற்று மலேசியாவில் கண்டறியப்பட்டது: சுகாதார அமைச்சர்

புத்ராஜெயா:

கோவிட்-19 இன் புதிய தொற்று மலேசியாவில் கண்டறியப்பட்டது சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சூல்கிப்ளி அஹ்மத் கூறினார்.

கடந்த செப்டம்பர் 6 வரை, தொற்று நோயியல் வாரம் 35/2025இல் கீழ்  43,087 சம்பவங்கள் பதிவானது.

இதில் இருந்து கைவிட-19 XFG இன் புதிய மாறுபாடு தொற்று பரவுவதை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது.

மொத்த பதிவான வழக்குகளில் 8.2 சதவீதம் இதில் உள்ளடங்கியுள்ளதாகும்.

சுகாதார அமைச்சால் நடத்தப்பட்ட மரபணு கண்காணிப்பு என்பி.1.8.1 மாறுபாடு தொற்று மிக உயர்ந்த மட்டத்தில் கண்டறியப்பட்டது.

இது 39.4 சதவீதத்தை உள்ளடக்கியது என்றும், ஜேஎன்.1 மாறுபாடு 18.1 பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கு பங்களித்தது என்றும் அவர் கூறினார்.

மேலும் XEC மாறுபாடு 13.3 சதவீத கோவிட்-19 தொற்றுகளுக்கு பங்களித்துள்ளது.

மேலும் 21 சதவீத தொற்றுகள் பிற வகைகளை உள்ளடக்கியது என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset