நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோன் 95க்கான இலக்கு மானியம்; அடையாள அட்டையின் சிப் வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: சைபுடின்

கோலாலம்பூர்:

ரோன் 95க்கான இலக்கு மானியத்தை பெறுவதற்கு அடையாள அட்டையின் சிப் வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை வலியுறுத்தினார்.

ரோன் 95 பெட்ரோலுக்கான மானிய இலக்கு இந்த மாத இறுதியில் அரசாங்கம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மானியத்தை அனுபவிக்க, சேதமடைந்த அடையாள அட்டை சிப்புகளை அனைவரும் உடனடியாக சரிபார்த்து கொள்ள வேண்டும்.

மானியத்தை செயல்படுத்த, நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் செயல்பாட்டின் போது அடையாள அட்டையை பயன்படுத்தி அடையாள சரிபார்ப்பு தேவை என்று அவர் கூறினார்.

இந்த இலக்கு மானியத்தின் மூலம் ரோன் 95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 1.99 ரிங்கிட்டாகக் குறையும். 

மலேசியர்கள் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்களின் அடையாள அட்டையை சரிபார்த்து கொள்ள வேண்டும்.

சிப் வேலை செய்கிறதா, நல்ல நிலையில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset