நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ள நிலைமை ஆய்வு செய்ய பிரதமர் சபா பயணம்

கோலாலம்பூர்:

வெள்ள நிலைமை ஆய்வு செய்ய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சபாவுக்கு பயணமாகிறார்.

தொடர் கனமழையை தொடர்ந்து சபாவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் இன்று சபாவிற்கு வருகை தந்து பேரிடர் நிலைமையை ஆய்வு செய்ய உள்ளார்.

பெனாம்பாங், கோத்தா கினாபாலுவில் பல இடங்களில் நிலச்சரிவு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் இரங்கல் தெரிவிக்க உள்ளார்.

பிரதமரின் இந்த பயணம் பிற்பகல் 2.15 மணிக்கு  பெனாம்பாங்கில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்யத் தொடங்க உள்ளது.

அடுத்து பிற்பகல் 3 மணிக்கு பெனாம்பாங்கில் உள்ள எஸ்.கே. செயிண்ட் பால் கோலோபிஸில் உள்ள கோலோபிஸ் தற்காலிக வெள்ள நிவாரணப மையத்திற்கு அவர் வருகை தருவார்.

அங்கு பாதிக்கப்பட்டவர்களின் நிலையை நேரில் பார்த்து, அவர்கள் மையத்தில் இருக்கும்போது அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன்நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset