நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிலையான வருமானம் இல்லாவிட்டாலும் 93,231 பேர் சொந்தமாக வீடு வைத்திருக்கிறார்கள்: ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங்

கோலாலம்பூர்:
நிலையான வருமானம் இல்லாவிட்டாலும் 93,231 பேர் சொந்தமாக வீடு வைத்திருக்கிறார்கள்.

வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் ங்கா கோர் மிங் இதனை கூறினார்.

வீட்டுவசதி கடன் உத்தரவாதத் திட்டத்திற்கான  மொத்தம் 93,231 விண்ணப்பங்கள் ஜூலை 31 ஆம் தேதி வரை அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதன் மொத்த நிதி கிட்டத்தட்ட 22.14 பில்லியன் ரிங்கிட் உத்தரவாதத்துடன் உள்ளது.

நாட்டிம் வரலாற்றில் இதுவே மிக உயர்ந்த சாதனை.

மேலும் 67% பெறுநர்கள் 300,000 ரிங்கிட், அதற்கும் குறைவான மதிப்புள்ள வீடுகளை வாங்குபவர்களில் அடங்குவர்.

இது அரசாங்கத்தின் மலிவு விலை வீட்டுவசதி நிகழ்ச்சி நிரலுக்கு இணங்க உள்ளது.

இந்தத் திட்டத்திற்கான முக்கிய இலக்குக் குழுவான பி40 குழுவிற்கு பெரும்பாலான ஒப்புதல்கள் வழங்கப்பட்டன.

வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சு  வீட்டுவசதி கடன் உத்தரவாதத் திட்டத்திற்கான மூலம் வாடகைக்கு சொந்தமாக நிதியளிப்பதன் மூலம் இலக்கு குழுக்களுக்கு நிதியளிக்கும் முயற்சியை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது  என்று அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset