நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சின் சியூ, சினார் ஹரியானுக்கு 100,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது: எம்சிஎம்சி

சைபர்ஜெயா:

சின் சியூ, சினார் ஹரியான் ஊடகங்களுக்கு தலா 100,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

எம்சிஎம்சி எனப்படும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் இதனை கூறியது.

இரண்டு உள்ளூர் ஊடக நிறுவனங்களான சின் சியூ மீடியா கார்ப்பரேஷன் பெர்ஹாட், சினார் காரங்கிராஃப் எஸ்டிஎன் பெர்ஹாட் ஆகியவற்றுக்கு  தலா 100,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சட்டத்துறை தலைவர் அலுவலகம் நடவடிக்கை எடுக்க அங்கீகாரம் அளித்த பின்னர் இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

சின் சியூ டெய்லி தேசியக் கொடியை முழுமையற்ற காட்சியை வெளியிட்ட குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டது.

தேசியக் கொடி நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, கண்ணியத்தின் சின்னம்.

அது எல்லா நேரங்களிலும் துல்லியமாகவும் மரியாதையுடனும் காட்டப்பட வேண்டும் என்றும் எம்சிஎம்சி வலியுறுத்தியது

அதே போன்று சினார் ஹரியான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஜிபி காலித் இஸ்மாயில் பற்றிய தவறான தகவல்களைப் பதிவிட்டு, 

உள்ளூர் அரசியல் கட்சியின் உயர் பதவியில் இருக்கும் நபருடன் அவரை இணைத்து வெளியிட்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டது என எம்சிஎம்சி கூறியது.

- பார்த்திபன்நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset